Homeசெய்திகள்சினிமாஜெயிலர் 2 வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்!

ஜெயிலர் 2 வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தார்.

we-r-hiring

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் வெற்றிக்காக அவர் கோவிலில் வழிபாடு செய்தார்.

அண்ணாமலையார் கோவிலில் தரிசனம்

நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்த அனிருத், அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபட்டார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் நடைபெற்ற அபிஷேக வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்தை முடித்துக் கொண்ட அனிருத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

ரசிகர்களுடன் புகைப்படம்

அனிருத் கோவிலுக்கு வந்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ரசிகர்களும் பொதுமக்களும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அனிருத் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

80 அடி நீள ரஜினி போஸ்டர்… மதுரையில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் தொடக்கம்!

MUST READ