Homeசெய்திகள்இந்தியாமாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறை, கழிப்பறை! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவட்ட நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறை, கழிப்பறை! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

-

- Advertisement -

நாடு முழுவதும் உள்ள மாவட்ட, கோட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

 

பெண் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பணியாற்றும் நீதிமன்றங்களில் இந்த வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் அவசியம்

பெண் வழக்கறிஞர்களுக்குப் போதிய ஓய்வறைகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது, பெண் வழக்கறிஞர்களுக்கான தனி ஓய்வறைகள் இல்லாத நிலையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண் வழக்கறிஞர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது முக்கியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவு

பெண் வழக்கறிஞர்களுக்கான ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும், நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் கட்டமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக் குழுக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிக்கும் பொறுப்பு தலைமை வழக்கறிஞரிடம் ஒப்படைப்பு

இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொறுப்பு இந்தியத் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்று, அவற்றைத் தொகுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தந்தை குறித்து கார்கே பேச்சு: நாடு முழுவதும் பாஜக போராட்டம் – மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

MUST READ