தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியினரின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படமான ‘பிளாக் நைட் பாய்ஸ்’ (Black Night Boys) படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.


கதாநாயகனாக அமல் அஜித்
இப்படத்தில் அமல் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவர், சமூக வலைதளங்களில் வெளியிடும் வீடியோக்கள் மூலமாகவும் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இளைஞர்களைக் கவரும் காதல் கதை
செம்பர் வி. முருகேசன் இயக்கும் இப்படம், இன்றைய இளைஞர்களைக் கவரும் காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகிறது. நடிகை தேவயானியும் படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள்
அருள் முருகன் பிக்சர் மற்றும் ட்ரீம் ரன்வே 26வது செஞ்சுரி நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். இளங்கோ படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பாடல்களை பா. விஜய் எழுதுகிறார். நடன இயக்குநராக பாபா பாஸ்கரும், சண்டைக் காட்சிகளுக்குப் பி.சி. ஸ்டண்ட்ஸ் குழுவும் பணியாற்றுகின்றனர்.
பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ‘Black Night Boys’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஓம்’ படத்தில் காவல் அதிகாரியாக சாய் பல்லவி – கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!
