Homeசெய்திகள்சினிமாசென்னையில் நடிகர் அஜித்துக்கு முழு உருவச் சிலை – கோவில் கட்டவும் ரசிகர்கள் திட்டம்!

சென்னையில் நடிகர் அஜித்துக்கு முழு உருவச் சிலை – கோவில் கட்டவும் ரசிகர்கள் திட்டம்!

-

- Advertisement -

நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை அமைத்து, ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். மேலும், அவருக்காகத் தனியாகக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

we-r-hiring

அஜித்துக்கு முழு உருவச் சிலை

மாங்காடு அருகே உள்ள கோவூரில், அஜித்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அஜித்தின் முழு உருவச் சிலையை பாபு திறந்து வைத்தார். தொடர்ந்து, சிலைக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். மேலும், 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

“அஜித் அரசியலுக்கு வர வேண்டும்” – அமைப்பினர் அழைப்பு

நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அமைப்பின் தலைவர் பாபு, நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 2031-ஆம் ஆண்டு அஜித் முதல்வராக வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தங்களது அமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அஜித்தைத் தங்களது தலைவராக முன்னிறுத்த விரும்புவதாகவும் கூறினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய பாபு, அரசியல் களத்தில் விஜய்யை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் அஜித் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். லண்டனில் விஜய் மற்றும் அஜித் சந்தித்துப் பழகிய புகைப்படங்கள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். இவை அமைப்பின் தலைவர் தெரிவித்த கருத்துகளாகும்.

3,000 சதுர அடியில் கோவில் கட்டத் திட்டம்

அடுத்தகட்டமாக, கோவூரில் சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்துக்காகத் தனிக் கோவில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகர்களின் திரைப்பட வெளியீடுகள் மற்றும் பிறந்தநாளின்போது சிறப்பு கொண்டாட்டங்களை நடத்தும் ரசிகர்கள், தற்போது அஜித்துக்கு முழு உருவச் சிலை அமைத்து, கோவில் கட்டவும் திட்டமிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் அஜித்குமார் இதுவரை அரசியலில் ஈடுபடுவதாக அறிவிக்காத நிலையில், அவரை அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் ரசிகர்கள் அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நஸ்ரியா – சூர்யாவின் ‘சீன்’ படத்தில் உற்சாகப் பேச்சு!

MUST READ