Homeசெய்திகள்விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது ஷமி அறிவிப்பு – 13 ஆண்டு கால...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது ஷமி அறிவிப்பு – 13 ஆண்டு கால பயணம் நிறைவு!

-

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 13 ஆண்டுகள் நீடித்த அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

we-r-hiring

64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகள்

36 வயதான முகமது ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் வெளிநாட்டு மண்ணில் மட்டும் 153 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பல்வேறு ஆடுகளச் சூழல்களிலும் சிறப்பாகப் பந்துவீசும் திறன் கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2025 மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஷமி விளையாடினார். அதன்பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

உருக்கமான விடைபெறும் பதிவு

தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில் அறிவித்த ஷமி, இந்திய அணியின் வெள்ளை நிற டெஸ்ட் சீருடைக்கு விடை கொடுப்பதாகவும், அதனுடன் தொடர்புடைய நினைவுகள் என்றும் தன்னுடன் இருக்கும் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்தபோது, நாட்டுக்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே தனது கனவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு விக்கெட், காயம், போராட்டம் மற்றும் மீண்டு வந்த தருணமும் தனக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாக இருந்ததாகவும், கனத்த இதயத்துடனும் ஏராளமான அழகான நினைவுகளுடனும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அறிமுகமான அதே நாளில் ஓய்வு அறிவிப்பு

கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஷமி தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நவம்பர் 6-ம் தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் இத்துடன் நிறைவடைந்துள்ளது. எனினும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டுமே அவர் ஓய்வு பெற்றுள்ளார்; வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது ஒருநாள் போட்டி: இந்திய பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து! 134 ரன்களுக்கு ஆல் அவுட் – குர்னூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

MUST READ