Homeசெய்திகள்சினிமா'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழா அப்டேட்!

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

-

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினி, பிரபு, நயன்தாரா ,ஜோதிகா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் இந்த படம் அமைந்திருந்தது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்க எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு முதல் பாகத்தைப் போல முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring

இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணி அளவில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ