தளபதி 68 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் தற்போது தனது லியோ திரைப்படத்தை முடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவதற்கு முழுவீச்சல் தயாராகி வருகிறது.

லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 திரைப்படம் தொடங்க இருக்கிறது. இதனை ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க உள்ளார். இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடியாக ஸ்னேஹா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளனர் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஆனால் படம் தொடங்குவது குறித்தோ அல்லது மற்ற நடிகர்கள் குறித்தோ எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
Viraivil https://t.co/SHNkNqz1uj
— venkat prabhu (@vp_offl) September 14, 2023
ஆனால் ரசிகர்கள் பலரும் தளபதி 68 படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைதள பக்கத்தில் தளபதி 68 அப்டேட் எப்போது என கேட்டுள்ளார். அதற்கு வெங்கட் பிரபு விரைவில் என பதிலளித்துள்ளார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அதற்கு முன்பாகவே வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


