அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

 

Senthil balaji

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கடந்த நவம்பர் 22- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை தொடர்பான அறிக்கை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

பிணை வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் டிசம்பர் 04- ஆம் தேதி வரை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், மூளைக்கான என்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?

அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாகவும், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் கால்சியம் படிவு உள்ளதாகவும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement