Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

-

- Advertisement -

நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் கலக்கி வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.

இதற்கிடையில் நயன்தாரா, டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி படத்திலும், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அன்னபூரணி படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். ஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். ராக்ஸ்டார் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். நயன்தாராவின் பாலிவுட் அறிமுக படமான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?

மேலும் நயன்தாராவின் அன்னபூரணி பட போஸ்டர்களும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமராவை இயக்குவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “புதிய தொடக்கங்களின் மாயாஜாலத்தை நம்புங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் நயன்தாரா இயக்குனராக அறிமுகமாகிறாரா? என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர். ஆனால் அந்த புகைப்படமானது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா ஏற்கனவே ரௌடி பிக்சர்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ