- Advertisement -
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்தின் ட்ரைலர் நாளை வௌியாகிறது.

இந்திய திரையுலகின் கிங்கானாக அறியப்படுபவர் ஷாருக்கான். இவரது நடிப்பில் அண்மையில் வௌியான திரைப்படம் ஜவான். தமிழ் இயக்குநர் அட்லீ இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வௌியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியானது. விமர்சனங்கள் ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.



