தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும், தங்களது அனுபவங்களையும் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


‘ரணபாலி’ பட விளம்பரத்திற்காக சென்னை வருகை
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் விளம்பரப் பணிகளுக்காகச் சென்னை வந்த இருவரும், தமிழக முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய ராஷ்மிகா
இந்தச் சந்திப்பு குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நீண்ட காலமாக விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜய்யின் பயணம் வியக்கத்தக்கது என்றும், அவருக்கு தனது அன்பையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவிப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். நீண்ட வேலை நாளுக்குப் பிறகும் தங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றதாகவும், வாழ்க்கை, பணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தன்னுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே சந்திப்பிலேயே விஜய் தனக்குப் பிடித்தமானவராக மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட விஜய் தேவரகொண்டா, அவருக்கு தனது அன்பையும் மரியாதையையும் தெரிவித்துள்ளார்.
திரைப்பட விளம்பரப் பணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முன்பதிவிலேயே ரூ.30 கோடியை நெருங்கும் வசூல்!
