Homeசெய்திகள்சினிமாவிஷால் - பி.எஸ். மித்ரன் கூட்டணியின் 'இரும்புத்திரை 2'.... ஷூட்டிங் குறித்த அப்டேட்!

விஷால் – பி.எஸ். மித்ரன் கூட்டணியின் ‘இரும்புத்திரை 2’…. ஷூட்டிங் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

இரும்புத்திரை 2 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விஷால் - பி.எஸ். மித்ரன் கூட்டணியின் 'இரும்புத்திரை 2'.... ஷூட்டிங் குறித்த அப்டேட்!

நடிகர் விஷால் ‘மகுடம்’ படத்திற்குப் பிறகு ‘புருஷன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர, இன்னும் சில படங்களிலும் அவர் கமிட் ஆகி வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், ‘இரும்புத்திரை 2’ திரைப்படமும் இவருடைய லைன்-அப்பில் உள்ளது.
​கடந்த 2018-ஆம் ஆண்டு விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோரின் நடிப்பில் ‘இரும்புத்திரை’ திரைப்படம் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இப்படம் விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால், ‘இரும்புத்திரை’ இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி, சமீபகாலமாக ‘இரும்புத்திரை 2’ படம் தொடர்பான பல அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.விஷால் - பி.எஸ். மித்ரன் கூட்டணியின் 'இரும்புத்திரை 2'.... ஷூட்டிங் குறித்த அப்டேட்!​இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ‘இரும்புத்திரை’ வெற்றியைத் தொடர்ந்து ‘ஹீரோ’, ‘சர்தார்’ மற்றும் ‘சர்தார் 2’ ஆகிய படங்களை இயக்கினார் பி.எஸ். மித்ரன். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சர்தார் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இதனை அடுத்து பி.எஸ். மித்ரன் ‘இரும்புத்திரை 2’ படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் விஷால் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
​இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், 2028-ஆம் ஆண்டில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷால் - பி.எஸ். மித்ரன் கூட்டணியின் 'இரும்புத்திரை 2'.... ஷூட்டிங் குறித்த அப்டேட்!மேலும் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ள நடிகை சமந்தா, சினிமாவிலிருந்து சுமார் ஓராண்டு காலம் குட்டி பிரேக் எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ள சமந்தா, சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் முதல் படமாக ‘இரும்புத்திரை 2’ அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ