Homeசெய்திகள்சினிமாநீடிக்கும் 'அரசன்' படப்பிப்பு.... வெற்றிமாறனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?

நீடிக்கும் ‘அரசன்’ படப்பிப்பு…. வெற்றிமாறனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?

-

- Advertisement -

வெற்றிமாறனின் அரசன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.நீடிக்கும் 'அரசன்' படப்பிப்பு! வெற்றிமாறனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா? இதில் சிம்புவை வேறொரு பரிமாணத்தில் வெற்றிமாறன் காட்டியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் இப்படத்திலிருந்து 8 நிமிடப் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறது. இது தவிர இந்த படமானது 2027 முதல் பாதியில் வெளியாகும் என நம்பப்படுகிறது. ​இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தகட்டப் பணிகள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ​அதன்படி, ‘அரசன்’ படத்திற்காக சிலம்பரசன் ஏற்கனவே 60 முதல் 70 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்துள்ள நிலையில், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் கூடுதலாக 80 நாட்கள் படப்பிடிப்பு நடத்த சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இரண்டு முக்கியக் காட்சிகளும் இன்னும் சில பகுதிகளும் படமாக்கப்பட வேண்டியுள்ளதால், வெற்றிமாறன் இந்தக் கூடுதல் நாட்களைக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.நீடிக்கும் 'அரசன்' படப்பிப்பு! வெற்றிமாறனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?​மேலும், இதுவரை படமாக்கப்பட்ட ஒரு மணி நேரக் காட்சிகளை இசையமைப்பாளர் அனிருத்திடம் வெற்றிமாறன் போட்டுக் காட்டியுள்ளார். இதற்கிடையில், இப்படத்தின் இறுதி எடிட்டை வெற்றிமாறன் பார்த்த பிறகு, தேவைப்பட்டால் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இப்படத்தில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

 

MUST READ