தென்னிந்திய சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஏஓடி’ ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த படம் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும், பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்திலும் இவர் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் இவர், ராம்சரணின் பெத்தி பட பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன், சமீபத்திய பேட்டி ஒன்றில், திரைப்படங்களில் சிறப்பு நடனப் பாடல்களில் ஆடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
#ShrutiHaasan about Special Dance Numbers:
“I’m passionate about dancing. I’m free about my sexuality. If I do that, I don’t feel I’m any less of an artist, any less of a woman, or any less talented. For a long time, I didn’t do films where I wasn’t dancing. When they called me, I got genuinely excited. I was excited about my paycheck. I’m not sorry about it, and I had a nice time..” https://t.co/FhSjdOsQTb
— Laxmi Kanth (@iammoviebuff007) November 29, 2026
அதில் அவர் கூறியதாவது, “எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். எனது பாலுணர்வு விஷயத்தில் நான் சுதந்திரமாக இருக்கிறேன். அப்படிச் செய்வதால் நான் எந்த விதத்திலும் குறைந்த கலைஞராகவோ, குறைந்த பெண்ணாகவோ அல்லது திறமை குறைந்தவராகவோ உணரவில்லை. நீண்ட காலமாக நான் நடனமாடாத படங்களில் நடிக்கவில்லை. இதுபோன்ற பாடல்களுக்கு என்னை அழைத்தபோது நான் உண்மையிலேயே உற்சாகமடைந்தேன். அதற்காகக் கிடைத்த சம்பளத்தை நினைத்தும் நான் மகிழ்ச்சியடைந்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை, அதில் நான் நல்ல நேரத்தைச் செலவிட்டேன்.” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
