நடிகை ஸ்ருதிஹாசன் தனது அடுத்த படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ‘ட்ரெயின்’, ‘வேட்டுவம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், இவர் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்தை இயக்கிய தருண் தேஜா இந்தப் படத்தை இயக்க, வருண் முரளி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Q: Nowadays, female centric films are becoming increasingly popular, You are now doing a film with Shanthi Talkies. Is this your first female centric film?
#ShrutiHaasan:
– No, I would say it is a film where I am headlining the story. I have never described it as a female centric film. Whenever I talk about my upcoming project with Shanthi Talkies, I say that I am headlining the story, just like how #Rajini sir is headlining #Coolie.
#ShrutiHaasanxShanthiTalkies https://t.co/emfvvcOHeV— Movie Tamil (@_MovieTamil) November 29, 2026
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம், “இப்போதெல்லாம் பெண்களை மையப்படுத்திய படங்கள் பிரபலமாகி வருகின்றன. சாந்தி டாக்கீஸ் படத்தில் நடிக்கும் இந்த புதிய படம் தான் உங்களின் முதல் ஃபீமேல் சென்ட்ரிக் படமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசன், “இல்லை, இதை நான் கதையைத் தாங்கிப் பிடிக்கும் முதன்மைக் கதாபாத்திரமாகத்தான் சொல்வேன். இதை நான் ஒருபோதும் பெண்களை மையப்படுத்திய படம் எனக் குறிப்பிடவில்லை. சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துடனான எனது அடுத்த படம் குறித்து பேசும்போதெல்லாம், ரஜினி சார் ‘கூலி’ படத்தை முன்னின்று தாங்கிப் பிடிப்பது போல நானும் இந்தக் கதையை முன்னின்று வழிநடத்துகிறேன் என்றுதான் சொல்வேன்” எனத் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.
