கார்த்தியின் ஹிட் 4 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, கடைசியாக ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் ‘மார்ஷல்’, ‘கார்த்தி 30’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இது தவிர இன்னும் பல படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், நானி நடிப்பில் வெளியான ‘ஹிட் 3’ திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும், ‘ஹிட் 4’ படத்தில் கார்த்தி தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும், போலீஸ் அதிகாரியாகக் களமிறங்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் சைலேஷ் கொலனு இப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது முழு நீள ஆக்ஷன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தின் கதை தயாராகிவிட்டதாகவும், நானி இப்படத்தைத் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் விரைவில் நானியிடம் இது குறித்து பேச இருப்பதாகவும் அதன் பிறகு கார்த்தியிடம் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார். இயக்குநர் சைலேஷ் கொலனு கொடுத்த இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
