spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி.....மோகன்லாலின் 'நேரு' டிரைலர் வெளியீடு!

மீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி…..மோகன்லாலின் ‘நேரு’ டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

மீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி..... 'நேரு' டிரைலர் வெளியீடு!நடிகர் மோகன்லால் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் வ்ருஷபா என்னும் திரைப்படத்திலும், எம்புரான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மோகன்லால் நடித்துள்ள நேரு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு சியாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பிரியாமணி ,அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மீண்டும் இணைந்த த்ரிஷயம் பட கூட்டணி..... 'நேரு' டிரைலர் வெளியீடு!

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படக்குழுவினர் புதிய போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மோகன்லால் இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். எந்த ஒரு வழக்கிலும் ஈடுபடாமல் இருக்கும் மோகன்லால், ஒரு கட்டத்தில் வழக்கு ஒன்றில் வாதாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பிறகு மோகன்லாலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து அந்த வழக்கில் மோகன்லால் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் முழு நீள கதை என்பது தற்போது வெளியான ட்ரெய்லரின் மூலம் தெரியவந்துள்ளது.

த்ரிஷ்யம் 1 மற்றும் த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு பிறகு ஜீத்து ஜோசப் ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன்படி வெளியான இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ