Homeசெய்திகள்சினிமாபிரபாஸ், பிரித்விராஜ் கூட்டணியின் சலார்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

பிரபாஸ், பிரித்விராஜ் கூட்டணியின் சலார்…. ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

-

- Advertisement -

பிரபாஸ், பிரித்விராஜ் கூட்டணியின் சலார்.... ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் சாப்டர் 1, கேஜிஎப் சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலமடைந்த பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் தான் சலார். ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். உயிருக்கு உயிரான இரு நண்பர்கள் எதிரிகளாக எப்படி மாறுகின்றனர் என்பதை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அந்த வகையில் பிரபாஸ் கதாநாயகனாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிக பிரமாண்டமாகவும் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து சலார் படத்தின் சூரியன் குடையை நீட்டி எனத் தொடங்கும் ஆகாச சூரியன் என்னும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் பாடலில் சிறு வயது பிரபாஸுக்கும் பிரித்விராஜுக்கும் இடையிலான அளவு கடந்த நட்பு காண்பிக்கப்படுகிறது. எமோஷனல் காட்சிகள் நிறைந்த இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

we-r-hiring

இந்தப் பாடலை மதுர கவி எழுத ஐரா உடுப்பி பாடியுள்ளார். ரவி பஸ்ருர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ