spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிஸ்டர் சந்திரமௌலி புகழ் சங்கரன் காலமானார்

மிஸ்டர் சந்திரமௌலி புகழ் சங்கரன் காலமானார்

-

- Advertisement -
பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் ரா.சங்கரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழில் 1974-ம் ஆண்டு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரா.சங்கரன். இவர் இயக்கம் தவிர ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், மௌன ராகம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை என 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் நாயகிகளுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா இவரிடம் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக சந்திரமௌலி என்ற வேடத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, மிஸ்டர் சந்திரமௌலி என அவரை கூப்பிடும் காட்சி மிகவும் பிரபலம்.
we-r-hiring

1999 ஆண்டுக்கு பின் எந்த படத்திலும் அவர் நடிக்காமல் சினிமாவிலிருந்து விலகினார். இந்த நிலையில், 91 வயதாகும் ரா.சங்கரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

MUST READ