spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை... ஜிவி பிரகாஷ் அசத்தல்...

தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை… ஜிவி பிரகாஷ் அசத்தல்…

-

- Advertisement -
தங்கலான் திரைப்படத்தில் பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படங்களில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

we-r-hiring
கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளா மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின், சில வாரங்கள் கழித்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகளும், பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில், தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கு பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் யாழ் இசையை ரீக்ரியேட் செய்ததது போல தங்கலான் படத்திலும் பழங்குடியை இசையை ரசிக்கலாம் என கூறியிருக்கிறார்.

MUST READ