spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதிரி புதிரியாக வெளியானது சலார் படத்தின் ரிலீஸ் ட்ரைலர்

அதிரி புதிரியாக வெளியானது சலார் படத்தின் ரிலீஸ் ட்ரைலர்

-

- Advertisement -
சலார் திரைப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கேஜிஎஃப் படங்களின் மூலமாக இந்திய திரை உலகில் கொடி கட்டி பறக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார். இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரும், பாகுபலி நாயகனுமான பிரபாஷ் நடித்துள்ளார். மலையாள புகழ் பிருத்விராஜ், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார்.

we-r-hiring
இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 10 கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக “ஆகாச சூரியனே” பாடலும் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்றது. பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இடையாயான நட்பு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சலார் படத்திலிருந்து ரிலீஸ் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. வரும் 22-ம் தேதி சலார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ