- Advertisement -
சுழல் 2-ம் பாகத்தில் பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் சுழல். இந்த இணைய தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புகழ்பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவான இந்த தொடர் கடந்த ஆண்டு பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர்களில் ஒன்று. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, இளங்கோ, நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்ளில் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் திரில்லர் கதையாக இந்த தொடர் உருவானது.



