- Advertisement -
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரை உலகில் உச்ச இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதேசமயம் செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிட்லர் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, சரண்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
