நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை முயற்சித்து, அப்படங்களின் மூலம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். பார்த்திபன், தான் பேசுகின்ற வார்த்தைகளிலும், எழுதுகின்ற வரிகளிலும் புதுமைகளை கையாளக் கூடியவர். பார்த்திபனின் எல்லா படங்களுமே வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான இரவில் நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டீன்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குடிசைகளில் வாழும் ஏழை எளிய சிறுவர்களின் வாழ்வியல் கதைகளை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. அதே சமயம் நடிகர் பார்த்திபன் டீன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மெரினா கடற்கரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜனவரி 20) வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் பார்த்திபனின் முந்தைய படங்களைப் போல டீன்ஸ் படத்திலும் புதுமையான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.