spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராயன் படத்தில் தனுஷ் மகனா?

ராயன் படத்தில் தனுஷ் மகனா?

-

- Advertisement -

தனுஷ், ப. பாண்டி படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு கவனம் பெற்றனர். ராயன் படத்தில் தனுஷ் மகனா?சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தல் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தினை 2024 கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் அனைத்து கதாபாத்திரங்களும் ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராயன் படத்தில் தனுஷ் மகனா?இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்தில் தனுஷ் மகன் தனது நடிப்பை எப்படி வெளிப்படுத்தி இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ