- Advertisement -
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற பார்க்கிங் திரைப்படம், 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். இவரது நடிப்பில் வெளியான ஓ மணப்பெண்ணே, பியார் பிரேமா காதல், தாராள பிரபு, எல்ஜிஎம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.


இதில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்திருந்தார்.



