spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா, கமல்ஹாசன்... புகைப்படம் வைரல்...

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா, கமல்ஹாசன்… புகைப்படம் வைரல்…

-

- Advertisement -
தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் தனி சகாப்தம் என்றால் அது மணிரத்னம் என்றே சொல்லலாம். முன்னணி இயக்குநராக மட்டுமன்றி அனைவரின் விருப்ப இயக்குராகவும் வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். கிட்டத்தட்ட நாயகன் படத்திற்கு பிறகு இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

we-r-hiring
இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனமும் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர்கள், அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதியாக சிம்புவின் அறிமுக காட்சியை படக்குழு பகிர்ந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவும், கமல்ஹாசனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.

MUST READ