கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்காக ப்ரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்திருந்த கல்கி 2898AD திரைப்படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். நாயகன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு நடித்த வருவது மற்றொரு எதிர்பார்ப்புக்கு காரணம். மேலும் இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா என பல நட்சத்திர பட்டாளங்கள் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு புதுடெல்லி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட சிம்புவின் போர்ஷன் விரைவில் முடிவடைந்து விடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பானது 100 நாட்களுக்கும் அதிகமாக நடந்து வருகிறதாம். இதற்கு காரணம் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகிய பின் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க மணிரத்னம் கதையில் சிறு மாற்றங்களை செய்திருந்தார்.
தற்போது படப்பிடிப்பு தாமதமாவதற்கு அதுதான் காரணம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதே சமயம் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவையில் இருக்கும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங் ……இதுதான் காரணமா? …. அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?
-
- Advertisement -