HomeBreaking Newsபிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்! 75 வயதில் சென்னையில் உயிரிழப்பு – திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்! 75 வயதில் சென்னையில் உயிரிழப்பு – திரையுலகினர் அதிர்ச்சி!

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவரது மறைவு இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்! 75 வயதில் சென்னையில் உயிரிழப்பு – திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழில் பல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள கிருஷ்ணராஜ், தனது தனித்துவமான குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் இவருக்குப் பெரும் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

we-r-hiring

இசையமைப்பாளர் தேவாவின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள கிருஷ்ணராஜ், தமிழ் திரைப்பட இசை உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்தார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் தனது குரல் வளத்தால் பாடல்களுக்கு உயிரூட்டியவர்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தி இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது குரலால் பல பாடல்களை ரசிகர்களின் நினைவில் நிலைநிறுத்திய கிருஷ்ணராஜின் மறைவு, தமிழ் திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ