தமிழக அரசியலில் நிலவிவரும் மாநில உரிமைகள் பறிப்பு, பல்கலைக்கழக விவகாரங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முரண்பாடுகள் குறித்து திமுக சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல் புகாரி அளித்துள்ள சிறப்பு நேர்காணல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு – சமரசத்தின் விளைவு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், “ஆளுநருடன் தொடக்கத்தில் சமரசம் செய்துகொண்டதின் விளைவுதான் இது. சட்டமன்றத்தில் தேசிய கீதத்துடன் சேர்த்துப் பாடியபோதே நாங்கள் எச்சரித்தோம். ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடாமல், பெயரளவுக்குப் புறக்கணிப்பதால் மட்டும் உரிமைகளை மீட்க முடியாது. மோதல் போக்கை கையாள்வது வேறு, உரிமைகளுக்காக உறுதியாக நிற்பது வேறு” என்றார்.
தோழமைக் கட்சிகளின் விமர்சனங்களும் முரண்பாடுகளும்
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணிக் கட்சிகளுக்குள் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. விசிக தலைவர்கள் வெவ்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருவதுடன், சிலர் முரண்பாடான நிலைப்பாடுகளையும் எடுத்து வருகின்றனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் அரசின் போக்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
தலைமைச் செயலக அறை மாற்றம் மற்றும் அரசியல் விமர்சனங்கள்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறை மாற்றப்பட்டது தொடர்பான விவாதங்கள் குறித்துப் பேசிய அலிமல் புகாரி, கடந்த கால அரசியல் அனுபவங்களும் ஆளுமைத் திறன்களும் எத்தகைய பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், கூட்டணிக் கட்சிகள் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்கள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழலின் எதிர்காலம் குறித்தும் தனது நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!
