spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா2023 டாப் 10 பட்டியலில் லியோ, ஜவான், ஜெயிலர்

2023 டாப் 10 பட்டியலில் லியோ, ஜவான், ஜெயிலர்

-

- Advertisement -

2023 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் டாப் 10 பட்டியலில் விஜய்யின் லியோ மற்றும் ஜவான் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.

 

we-r-hiring
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லியோ. ரசிகர்களின் ஒட்டமொத்த வரவேற்பையும் பூர்த்தி செய்யும் விதமாக லியோ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ஜனனி, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்த லியோ திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, சென்னை நேரு அரங்கில் வெற்றி விழாவும் நடத்தப்பட்டு, படக்குழுவினர் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோல, செப்டம்பர் மாதம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த திரைப்படம் ஜவான். ஷாருக்கான் இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அட்லீ படத்தை இயக்கியிருந்தார். படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. லியோ மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களுக்குமே அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஐஎம்டிபி தேர்ந்தெடுத்துள்ள முதல் 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, அப்பட்டியலில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும், விஜய்யின் லியோ திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. ஜவான் திரைப்படம் முதல் இடத்திலும், லியோ திரைப்படம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல, ஜெயிலர் திரைப்படம் 6-வது இடத்தை பிடித்திருக்கிறதது. மேலும், மோஸ்ட் பாப்புலர் நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார். இதனால், கோலிவுட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

MUST READ