Homeசெய்திகள்சினிமாநண்பர்களுடன் சமைத்து சாப்பிட்ட நடிகர் அஜித்!

நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்ட நடிகர் அஜித்!

-

- Advertisement -

நடிகர் அஜித் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்ட நடிகர் அஜித்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகிறார். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்ட நடிகர் அஜித்!இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் மீதமுள்ள படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை படக்குழுவினர் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது.நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்ட நடிகர் அஜித்! இந்நிலையில் தனது நண்பர்களுடன் பைக் ரைடுக்கு சென்றுள்ளார் அஜித். இந்த பைக் ரைடுக்கு விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ஆர்வ், அஜித்துடன் சென்றிருக்கிறார். அப்போது காட்டுக்குள் தனது நண்பர்களுடன் உணவு சமைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.

MUST READ