Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து வெற்றிப் படங்கள்... சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்...

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்… சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்…

-

லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தாமதமாக வெளியானாலும், வசூலிலும் வேட்டையாடியது. இதனால், கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளளின் ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

ஸ்டார் படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வௌியாகும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து படம் தாமதமானது. இந்நிலையில், இத்திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்து வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் ஒப்பந்தமாகி இருக்கிறார். மாஸ்க் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்.

இந்நிலையில், டாடா படத்தில் தொடங்கி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கவின், தனது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். தற்போது படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். மேலும் உதவியாளர்கள் 2 பேரை நியமித்து அவர்கள் முதலில் கதைக்கு ஓகே சொன்னால் தான், கவின் கதையை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ