spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’… முழுவதுமாக நிறைவு பெற்ற படப்பிடிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’… முழுவதுமாக நிறைவு பெற்ற படப்பிடிப்பு!

-

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் படத்தில் இணைந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.laal-salaam-33.jpg

we-r-hiring

இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகி வருகிறது. அதனால் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் இப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் படத்தின் தங்களது பகுதிக்கான பகுதிகளை நிறைவு செய்தனர்.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக படகுழுவினர் அறிவித்துள்ளனர். அதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். லால் சலாம் படத்தை வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

MUST READ