spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித், அர்ஜுன் கூட்டணியின் 'விடாமுயற்சி'..... பக்கா ப்ளானுடன் களமிறங்கிய படக்குழு!

அஜித், அர்ஜுன் கூட்டணியின் ‘விடாமுயற்சி’….. பக்கா ப்ளானுடன் களமிறங்கிய படக்குழு!

-

- Advertisement -

அஜித், அர்ஜுன் கூட்டணியின் 'விடாமுயற்சி'..... பக்கா ப்ளானுடன் களமிறங்கிய படக்குழு!நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜுன் இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், திரிஷா, அர்ஜுன் ஆகியோரின் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதமே தொடங்கப்பட வேண்டிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக தொடங்கி தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித், அர்ஜுன் கூட்டணியின் 'விடாமுயற்சி'..... பக்கா ப்ளானுடன் களமிறங்கிய படக்குழு!மேலும் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் அஜித்தின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்படும் எனவும் மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை 2024 மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ