spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைகிறதா அஜித், எச்.வினோத் கூட்டணி?

மீண்டும் இணைகிறதா அஜித், எச்.வினோத் கூட்டணி?

-

- Advertisement -

மீண்டும் இணைகிறதா அஜித், எச்.வினோத் கூட்டணி?தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச். வினோத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எச் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார். இதற்காக எச் வினோத் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல்ஹாசனின் 233 வது படத்தை எச் வினோத் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் KH233 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுவதனால் இந்தப் படம் தொடங்கப்படாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதனால் எச் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார். அதன் பிறகு தான் KH233 படத்தை இயக்குவார் என்று சமீபத்தில் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

we-r-hiring

ஆனால் நடிகர் கார்த்தி தொடர்ச்சியாக பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் எச் வினோத் மீண்டும் அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மீண்டும் இணைகிறதா அஜித், எச்.வினோத் கூட்டணி?

ஏற்கனவே எச். வினோத் ,அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கி உள்ளார். நான்காவது முறையாக இவர்களின் கூட்டணி இணைவது உண்மையானால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்கும்.
நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ