- Advertisement -
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், தர்ஷன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட இப்படத்தை தற்போது மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் தொடங்கினர்.
AK's Love For Photography#AjithKumarPhotography#MagizhThirumeni @trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash
@ProRekha @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa @gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran pic.twitter.com/ifiy6dbZ4s— Suresh Chandra (@SureshChandraa) December 15, 2023