spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் டயலாக்கை பேசும் அஜித்..... அதிரப்போகும் திரையரங்கம்!

விஜய் டயலாக்கை பேசும் அஜித்….. அதிரப்போகும் திரையரங்கம்!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.விஜய் டயலாக்கை பேசும் அஜித்..... அதிரப்போகும் திரையரங்கம்! அதைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகன் ஆவார். எனவே ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படியெல்லாம் அஜித்தை டீசர் மற்றும் ட்ரெய்லரில் காட்டி இருந்தார். அதேபோல் மரண மாஸ் தரும் காட்சிகளை படத்திலும் வைத்திருப்பார் என நம்பப்படுகிறது. இவ்வாறு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரசிகர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ் இருக்கிறதாம். விஜய் டயலாக்கை பேசும் அஜித்..... அதிரப்போகும் திரையரங்கம்!அதாவது விஜயின் “What Bro..I’m Back..” என்ற டயலாக்கை அஜித் இந்த படத்தில் பேசுகிறாராம். அதுவும் அந்த காட்சி இன்டர்வெல் பிளாக்கில் வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள்
நிச்சயம் திரையரங்கமே அதிரப்போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த தகவல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவும் வைத்திருக்கிறது.

குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ