spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று பூஜையுடன் தொடங்குகிறதா அஜித்தின் 'விடாமுயற்சி'?...... வெளியான புதிய தகவல்!

இன்று பூஜையுடன் தொடங்குகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’?…… வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

துணிவு படத்தில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார். அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் விலகி மகிழ் திருமேனி AK 62 வை இயக்க இருக்கிறார்.

இது சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்று தலைப்பிடப்பட்ட புதிய திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித் நடிக்க இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அனிருத் இதற்கு இசையமைக்க உள்ளார்.

we-r-hiring

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு சமீப காலமாக வெளியாகவில்லை.

ஆனால் இது தொடர்பான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன்படி இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் தமன்னா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ