Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ்!

அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ்!

-

பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் அநீதி எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ரசவாதி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தலைப்பிடப்படாத மற்றொரு புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்க ஜெம்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து காளி வெங்கட், சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

MUST READ