Homeசெய்திகள்சினிமாபடத்தில் சம்பவம் செய்த அருண் மாதேஸ்வரன்... ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் ட்ரீட்...

படத்தில் சம்பவம் செய்த அருண் மாதேஸ்வரன்… ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் ட்ரீட்…

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகன் தனுஷ். தமிழ் சினிமாவை உலக சினிமா வரை சுமந்து சென்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழ் படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த தனுஷ் அடுத்து ஹாலிவுட்டுக்கு பறந்தார். தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான படம் தி க்ரே மேன். இந்நிலையில், தற்போது தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

 

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ஆயிரம் பேர் கொண்ட சண்டைக் காட்சி ஒன்று உள்ளது. அதுதான் படத்தின் மாஸ்டர் பீஸாக இருக்கும் என படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேப்டன் மில்லர் படம் 60 சதவிகிதம் டிராமா, 40 சதவிகிதம்ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ