Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய், பாலா கூட்டணியின் வணங்கான்..... இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

அருண் விஜய், பாலா கூட்டணியின் வணங்கான்….. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

-

அருண் விஜய் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார் அந்த வகையில் இவர் அக்னி சிறகுகள், மிஷன், வணங்கான் ,பார்டர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது வணங்கான் படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

வணங்கான் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த வணங்கான் திரைப்படம் ஆனது ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் உருவாகி வந்தது. சில நாட்கள் கன்னியாகுமரியில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா இந்த படத்தை விட்டு விலகினார்.

arun vijay and bala
arun vijay and bala

அதன் பிறகு தற்போது அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

தற்போது இப்படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன மேலும் இன்னும் ஒரு மாத காலத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ