spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலா இயக்கியுள்ள 'வணங்கான்' ...... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

பாலா இயக்கியுள்ள ‘வணங்கான்’ …… இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

-

- Advertisement -

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன் ஆகிய தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' ...... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!அடுத்தது இவரது இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அருண் விஜய் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின், சாயாதேவி ஆகியோர் அருண் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' ...... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி அன்று இயக்குனர் பாலா திரை துறையில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது.பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' ...... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்! எனவே இதனை கொண்டாடும் விதமாக பாலா 25 விழாவையும் அதே டிசம்பர் 18ஆம் நாளில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த விழாவில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ