Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் தனுஷ்- த்ரிஷா கூட்டணி!

மீண்டும் இணையும் தனுஷ்- த்ரிஷா கூட்டணி!

-

தனுஷ் மற்றும் த்ரிஷா கூட்டணி  மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ், தமிழ் திரை உலகின் மிகவும் முக்கியமான மற்றும் முன்னணி நடிகர்கராக வலம் வருகிறார். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து தனுஷ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். இவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகவும் வேகமாகவும் பகிரப்பட்டு வருகிறது.

dhanush-as-director.jpg

கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ப. பாண்டி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனராம்.
மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா தனுஷுக்கு அண்ணனாகவும் சந்தீப் கிஷன் தனுஷுக்கு தம்பியாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த படத்தின் கூடுதல் தகவலாக தனுஷுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. ஏற்கனவே இவர்கள் இருவரும் ‘கொடி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ