Homeசெய்திகள்சினிமாஇயக்குநர் சேரனின் தந்தை காலமானார், பிரபலங்கள் இரங்கல்...

இயக்குநர் சேரனின் தந்தை காலமானார், பிரபலங்கள் இரங்கல்…

-

- Advertisement -

பிரபல இயக்குனரான சேரன், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், முரண், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை, ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அத்திரைப்படங்களை இயக்கியும் உள்ளாார்.
இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அண்மையில் தமிழ்க்குடிமகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில் சேரனுடன் இணைந்து, ஸ்ரீ பிரியங்கா, லால், தீபா, வேல்ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு அதன் பின் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்து கடந்த மாதம் படம் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான மதுரை அருகே பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் காலமானார். 84 வயதான அவர் தியேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றியவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் அனைத்தும் அவரது சொந்த ஊரிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ