குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் புகழ். அதைத் தொடர்ந்து இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தேசிங்குராஜா 2 திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் புகழ். அதேசமயம் மிஸ்டர் ஜூ கீப்பர் எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை ஜே சுரேஷ் இயக்கி இருக்கிறார். ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜரத்தினம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் அனிமேஷன் இல்லாமல் உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், சமீபத்தில் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை நிர்வாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஜூன் 27ஆம் தேதி கடைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.