Homeசெய்திகள்சினிமாஅமரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்!

அமரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்!

-

நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.அமரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்!

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தை நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் தனது 52 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே தேரே இஸ்க் மெய்ன் என்ற பாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் பட்டியலில் தற்போது ராஜ்குமார் பெரியசாமியும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.அமரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்!ராஜ்குமார் பெரியசாமி, கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் திரைப்படத்தை இயக்கியவர். அதைத் தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் அமரன் படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ