spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் 'D51'..... அதிர போகும் அறிவிப்பு!

தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் ‘D51’….. அதிர போகும் அறிவிப்பு!

-

- Advertisement -

தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் 'D51'..... அதிர போகும் அறிவிப்பு!நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் தனுஷ். D51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதராபாத் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் இன்று மாலை 4.05 மணியளவில் D51 படத்தின் அதிர போகும் அறிவிப்பு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியின் 'D51'..... அதிர போகும் அறிவிப்பு!

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகையால் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா ஆகியோரை குறிப்பிடும் #DNS என்ற ஹேஷ் டேக்-ம் சமூக வலைதளங்களில் டரெண்டாகி வருகிறது.

MUST READ