Homeசெய்திகள்சினிமாவசூலை அள்ளிய தனுஷின் 'ராயன்'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வசூலை அள்ளிய தனுஷின் ‘ராயன்’…. ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.வசூலை அள்ளிய தனுஷின் 'ராயன்'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நிலையில் கடந்த 2017ல் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதன்படி பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக சாதித்துக் காட்டினார். அதன் பின்னர் ராயன் என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் தனுஷ். இந்த படம் தனுஷின் ஐம்பதாவது படமாகும். இதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.வசூலை அள்ளிய தனுஷின் 'ராயன்'.... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ