வீர தீர சூரன் படத்தில் தூள் பட பாடல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சியான் விக்ரமின் 62 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தினை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷின் இசையிலும் தேனி ஈஸ்வரியின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. ராவான கல்ட் கமர்சியல் படமாக தயாராகியுள்ள இப்படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட இந்த படத்தின் வெறித்தனமான டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வீர தீர சூரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான்’ எனும் பாடல் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர் விக்ரம், தூள் பட லுக்கில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்குமார் இப்படத்தை தூள் படத்தை போல் வேற மாதிரி இயக்கியுள்ளார் என்று பல அப்டேட்டுகளை எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்திருந்த நிலையில் இந்த தகவலும் ரசிகர்களின் ஆர்வத்தை மேன்மேலும் தூண்டி உள்ளது.